Thursday 18 October 2012

மலைகள்


எபிரோஜெனிக் (அ) கண்ட ஆக்க நகர்வு
1. செங்குத்தான நகர்வானது புவியின் மேலோட்டு பகுதியை மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கி பலவீனமான கோட்டின் வழியாக செல்வது பிளவுகள் (Faults ) எனப்படுகிறது
2. பிளவு கோட்டிற்கு இடையே காணப்படும் பகுதி மேல்நோக்கி தள்ளப்பட்டால் அது பிதிர் வு மலை ( Block Mountain ) அல்லது பீடபூமி ( Plateau ) எனப்படுகிறது.
3. பிளவு கோட்டிற்கு இடையே காணப்படும் பகுதி கீழ்நோக்கி தள்ளப்பட்டால் அது பிளவு பள்ளத்தாக்கு கொப்பரை ( Basin of Rift Valley ) எனப்படுகிறது
4. புவியின் மேலோட்டில் மிகப் பெரிய அளவிற்கு செங்குத்து நகர்வு ஏற்படுவது கண்ட ஆக்க நகர்வு அல்லது எபிரோஜெனிக் நகர்வு எனப்படுகிறது
5. ஆப்பிரிக்காவின் பெரிய பிளவு பள்ளத்தாக்கு கொப்பரை, நர்மதை பள்ளத்தாக்கு இவ்வகை வடிநிலங்களுக்கு உதாரணங்கள்

எரிமலைகள்


எரிமலைகள்
நீர் நிரம்பிய எரிமலை வாய் பெருவாய் ஏரி என்று அழைக்கப்படுகிறது
செயல்படும் எரிமலைகள்
1.                    இவ்வகை எரிமலைகள் அவ்வப்போது சீராக லாவாவை வெளியேற்றுகிறது
2.                    மிக அதிகமாக செயல்படும் எரிமலைகள் கடலடி மலைத் தொடர்களில் காணப்படுகிறது
3.                    ஹவாய் தீவில் உள்ள மோனா லோவ உலகிலேயே மிகப் பெரிய செயல்படும் எரிமலை
4.                    இந்தியாவில் உள்ள ஒரே செயல்படும் எரிமலை பாரன் தீவில் உள்ளது
5.                    தக்காண பீடபுமியின் வடமேற்கு பகுதி எரிமலைக் குழம்பால் ஆனது
தணிந்த எரிமலைகள்
1.        இவ்வகை எரிமலைகள் உறங்கும் எரிமலைகள் எனப்படுகிறது
2.        பல ஆண்டுகளுக்கு முன்பு வரை செயல்பட்டு கொண்டிருந்த்து, தற்போது லாவா வமிழ்வதை நிறுத்தி வைத்துள்ளது. 
3.        எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் உரிமலை குழம்பை உமிழலாம்
4.        இத்தாலியில் உள்ள வெசூவியஸ், ஹவாய் தீவிலுள்ள மௌனகியா ஆகியன இவ்வகை எரிமலைகளுக்கு உதாரணம்
உயிரற்ற எரிமலைகள்
1.        இவ்வகை எரிமலைகள் இறந்த எரிமலைகள் எனப்படுகிறது
2.        இவைகள் முன்பு உமிழ்ந்து கொண்டிருந்த்து
3.        தற்போது உமிழ்வது இல்லை
4.        எதிர்காலத்திலும் உமிழாழ
5.        ஆப்பிரிக்காவில் உள்ள மவுண்ட் கிளிமஞ்சாரோ, இந்தியாவில் கடக்கு அந்தாமான் தீவின் வடகிழக்கு பதியில் அமைந்துள்ள நார்கண்ட தீவு, தமிழ்நாட்டிலுள்ள திருவண்ணாமலைக் குன்றுகள், ஆந்திராவிலுள்ள பனகா குன்றுகள் ஆகியன இவ்வகை எரிமலைகளுக்கு உதாரணம்


Sunday 7 October 2012

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு 2012

எங்கள் பயிற்சி மையத்தில் பயின்ற திரு. பாஸ்கர் என்பவர் அண்மையில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் தமிழில் 99/100 பெற்றுள்ளார். அவருக்கு எங்களது  மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். பயிற்சியாளர்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறோம்.