Monday 25 June 2012

Group I, Group II & VAO

அவ்வையார் சேலம் பயிற்சி மையத்தில் Group I, Group II  & VAO க்கான பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளது. Admission நடைபெற்று வருகிறது 
 தொடர்புக்கு 7708812299

Tuesday 19 June 2012

நேர்முகத் தேர்விற்கான குறிப்புகள்


நேர்முகத் தேர்விற்கு செல்லும் போது தங்களின் நிறத்திற்கு ஏதுவான நிறத்தில் உடைகளை அணியவும்.  கண்ணை உறுத்தும் அல்லது பளபளக்கும் உடைகளையும் அதிகப்படியான நகைகளையும் அணிவதை தவிர்க்கவும்
நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்ட உடன் பதட்டப்படாதீர்கள்
அமைதியான முறையில் நேர்முகத் தேர்வினை எதிர்கொள்ளுங்கள்
நேர்முக அறைக்குள் சென்ற உடன் அனைவருக்கும் வணக்கம் தெரிவியுங்கள்
அமர சொல்லிய பின்  நன்றி கூறி சத்தமின்றி நாற்காலியினை நகர்த்தி அமரவும்
நாற்காலியில் அமரும் பொழுது நேராக அமரவும்.  சாய்து அமர்வது, தளர்வாக அமர்வது போன்றவற்றினை தவிர்க்கவும்
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தெரியவில்லை எனில் தெரியவில்லை என்று கூறவும்.  தவறாக பதிலளிக்க வேண்டாம்
கேள்விகள் குறித்த விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.
மதரீதியான, உணர்வு ரீதியான கேள்விகளில் விவாதங்கள் வேண்டாம்,  இப்பகுதியில் தங்களின் சொந்த கருத்துக்களை தவிர்த்தல் நலம்.

பொதுவாக நேர்முகத் தேர்வில் கீழ்கண்ட கேள்விகள் கேட்கப்படலாம்
1)   தனிப்பட்ட கேள்விகள்
  தங்களின் பெயர் என்ன
2)   குடும்பம் தொடர்பான கேள்விகள்
தந்தை, தாயார் மற்றும் சகோதர, சகோதரிகளின் கல்வித் தகுதி, மாத வருமானம் போன்றவை கேட்கப்படலாம்
 3)  தாங்கள் எந்த மாவட்டத்தினை சேர்ந்தவர் தங்களின் ஊர் என்ன
இப்பகுதியில் தங்கள் மாவட்டத்தினைப் பற்றி தெளிவாக அறிந்திருத்தல் வேண்டும்.  உதாரணமாக சேலம் மாவட்டத்தை சார்ந்தவராக இருப்பீர்களாயின் தாங்கள் மேட்டூர் அணை கட்டப்பட்ட வருடம், எந்த இரண்டு மலைகளுக்கு இடையில் அணை கட்டப்பட்டுள்ளது. அணையின் நீளம், உயரம், கொள்ளளவு, இதுவரை எத்தனை முறை முழு கொள்ளவினை எட்டியுள்ளது, கடைசியாக எப்பொழுது அணை நிரம்பியது.  ஸ்டான்லி நீர்த்தேக்கம் என பெயர் வரக்காரணம், அணை கட்டியபொழுது சென்னை ஆளுநராக பணியாற்றியவர் போன்ற தகவல்களை அறிந்திருத்தல் வேண்டும்.  மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற இடங்கள்  உதாரணமாக ஏற்காடு,  மலையின் உயரம், ஏற்காட்டின் உயரமான சிகரம், அண்மையில் எத்தனையாவது கோடை விழா நடைபெற்றது. ஏற்காடு ஏரி கடைசியாக எப்பொழுது செப்பனிடப்பட்டது போன்ற கேள்விகளை தாங்கள் எதிர்கொள்ள நேரிடலாம்.  மேலும்தங்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசின் திட்டங்கள் சாதனைகள் குறித்த கேள்விகள் கேட்கப்படலாம்

4) தாங்கள் பயின்ற பள்ளியின் பெயர்
5)  எந்த கல்லூரியில் படித்தீர்கள்
கல்லூரியின் பெயர், தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு, கல்லூரியில் பயின்ற புகழ்பெற்ற நபர்கள் போன்றவர்களை அறிந்திருத்தல் வேண்டும்
6)  தங்களின் பாடப்பிரிவு ( Major ) எது
பாடப்பிரிவுகளில் தனிகவனம் செலுத்தி குறிப்புகளை எடுத்துக்கொள்ளவும்.  பாடப்பிரிவுகள் சம்மந்தமாக கேள்விகள் மிகவும் ஆழமாக இருத்தல் வேண்டும்.  தங்கள் பாடப்பிரிவு தொடர்பான நடப்பு  நிகழ்வுகளையும் அறிந்திருத்தல் வேண்டும்.  உதாரணமாக தாங்கள் பொருளாதார பாடப்பிரிவினை சார்ந்தவராக இருப்பீர்களாயின் இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றவர் அவருக்கு எதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது போன்றவை அறிந்திருத்தல் நலம்
7)  நடப்பு செய்திகள்
     இப்பகுதியில் அண்மைகால நடப்பு நிகழ்வுகள் குறித்த கேள்விகள் இடம் பெறும்.  உதாரணமாக அண்மையில் நடைபெற்ற மக்கள்புரட்சிகள், சூரிய கிரகணம், நிலநடுக்கம், வெள்ளம், விருதுகள், மத்திய மாநில அரசால் அண்மையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், பட்ஜெட் போன்ற கேள்விகளை எதிர்கொள்ள நேரிடலாம்
8)  தற்பொழுது தாங்கள் பணிபுரிந்து வருகிறீர்களா
     ஆம், எனில் தங்களின் பணி குறித்த விபரங்கள், தங்களின் நிறுவனம் பற்றிய செய்திகளை அறிந்திருத்தல் வேண்டும்
9)  தாங்கள் விண்ணப்பத்தில் தேர்வு செய்துள்ள பணி
     இப்பகுதியில் தாங்கள் நேர்முகத் தேர்வின் போது அளிக்கப்படும் படிவத்தில் அளித்துள்ள பணி முன்னுரிமை குறித்து கேள்விகள் எழுப்பப்படும். 
உதாரணமாக தாங்கள் வருவாய் ஆய்வாளர் பணிக்கு முன்னுரிமை அளித்துள்ளீர்கள் எனில் அத்துறையின் தற்போதைய அமைச்சர், செயலாளர் யார், துறையின் நிர்வாக அமைப்பு தாங்கள் எதற்காக இப்பணியி தேர்வு செய்துள்ளீர்கள், இப்பணியின் கடமை என்ன, தாங்கள் இப்பணியில் எவ்வாறு சிறப்பாக செயல்படுவீர்கள் போன்ற கேள்விகள் கேட்கப்படலாம்
10)  தங்களின் பொழுது போக்கு
     இதில் தாங்கள் குறிப்பிடும் பொழுது போக்கினை பற்றி கேள்விகள் இடம் பெறும்.  பொதுவாக டி.வி. பார்ப்பது, இசை கேட்பது போன்றவற்றை தவிர்த்தல் நலம்.  உதாரணமாக தாங்கள் கிரிக்கெட் விளையாட்டினை பொழுதுபோக்காக குறிப்பிட்டிருந்தீர்கள் எனில் அண்மையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளைப் பற்றி அறிந்திருத்தல் வேண்டும்.  மேலும் சாதனைகளை மேற்கொண்ட வீர்களைப் பற்றியும் அவர்களது சாதனைகளைப் பற்றியும் அறிந்திருத்தல் வேண்டும். 

Group II Result


அவ்வையார் சேலம் பயிற்சி நிறுவனத்தில் பயின்றவர்களில் தொகுதி 2 தேர்வில் 41.66 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர் 

Friday 8 June 2012

நடப்பு நிகழ்வுகள்


இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ  2010 டிசம்பர் மாதம் 25ம் தேதி ஏவிய ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் தோல்வி அடைந்தது. ஜி.எஸ்.எல்.வி. தோல்வி பற்றிய ஆய்வுக்கு 11‌ பேர் கொண்ட குழு இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் ஆய்வில திட்டமிட்ட நேரத்துக்கு முன் கூட்டியே பூஸ்டர்கள் இணைப்பு துண்டித்ததால் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் தோல்வி அடைந்தது என தகவல் தெரிவிக்கிறது

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011க்காக தமிழகத்தில் உள்ள எஸ்.சி., - எஸ்.டி., பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இரண்டாம் கட்ட பணி, வரும் பிப்., 9ல் துவங்கி பிப்., 28ல் முடிகிறது. இக்கணக்கெடுப்பில் எஸ்.சி., - எஸ்.டி., விவரமும் சேகரிக்கப்படுகிறது. தமிழகத்தில் 76 இனங்களில் எஸ்.சி.,களும், 36 இனங்களில் எஸ்.டி.,களும் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரம் அல்லாத உறுப்பினராக, 19 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா மீண்டும் இடம் பெற்றது. இந்தாண்டின் ஆகஸ்ட் மற்றும் அடுத்தாண்டின் நவம்பர் மாதங்களில் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை பொறுப்பேற்கும்.
ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில், 19 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா கடந்த 2,1,2011 அன்று அதிகாரப்பூர்வமாக நிரந்தரம் அல்லாத உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டது. இரண்டாண்டு காலம் (2011-2012) இந்தப் பொறுப்பில் நீடிக்கும். இந்தியாவுடன், ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா, கொலம்பியா மற்றும் போர்ச்சுகல் நாடுகளும் பொறுப்பேற்றுக் கொள்கின்றன.ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாடு, பாதுகாப்பு கவுன்சிலில் தலைமை பொறுப்பேற்கும். அது, ஆங்கில எழுத்தின் அகர வரிசைப்படி அமையும். அதன்படி, இந்தாண்டு ஆகஸ்ட் மற்றும் அடுத்தாண்டு நவம்பர் ஆகிய இரு மாதங்களில் இந்தியா தலைமை பொறுப்பேற்கும். நேற்று பொறுப்பேற்றது உட்பட, நிரந்தரம் அல்லாத உறுப்பினர் பதவிக்கு இந்தியா இதுவரை ஏழு முறை பொறுப்பேற்றுள்ளது

செயற்கைக்கோள் மூலம் பெறப்பட்ட படங்கள், விவரங்களை பயன்படுத்தி வானிலை குறித்த தகவல்களை அறியும் நவீன சாப்ட்வேர் ஒன்றை, சர்வதேச ஆய்வாளர்கள் குழு அறிமுகப்படுத்தியுள்ளது. கப்பல்கள், விமானங்களின் பயணத்திற்கு பூமியில் நிலப்பரப்பு மற்றும் கடலில் ஏற்படும் வெப்பம், காற்றின் திசை, வேகம், குளிர், பனி, மழை போன்ற விவரங்கள் மிக அவசியம். இந்த தகவல்களை வானிலை நிலையங்கள் தருகின்றன. இதற்காக, முன்பெல்லாம் காற்றடைக்கப்பட்ட பலூன்கள் விடப்பட்டு தகவல்கள் பெறப்பட்டன. அறிவியல் முன்னேற்றம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக, பூமியைச் சுற்றி வந்து, வானிலை குறித்த விவரங்களைத் தரும் செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டுள்ளன. இந்த செயற்கைக் கோள்கள், குறிப்பிட்ட நேர இடைவெளியில் பூமியின் பல்வேறு இடங்களை படம் எடுத்து அனுப்பி வருகின்றன. இந்த படங்கள் மூலமாக ஒரு மேகக் கூட்டத்தின் நிலை, புயல், மழை போன்ற விவரங்களை வானிலை ஆராய்ச்சியாளர்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடிகிறது. 

புத்தாண்டின் முதல் சூரிய கிரகணம் 4.1.2011அன்று . பகுதி நேரமாக தெரிந்த்து. இந்த சூரிய கிரகணம் ஐரோப்பா,அரேபியன் பெனின்சுலா, வடக்கு ஆப்பிரிக்கா,மேற்கு ஆசியா உள்ளிட்ட உலகின் வடக்கு பகுதியில் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூரிய கிரகணம் 12.10.11 மணி(ஐ,எஸ்.டி) முதல் 16.30.54 வரை தெரிய உள்ளது. இந்த நேரத்தில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலா கடந்து செல்ல உள்ளது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான்,அரியானா, உத்திரபிரதேசம், டில்லி, பஞ்சாப்,உத்திரகாண்ட், இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய பகுதிகளில் தெரியும் 

சென்னையில் 3.1.2011 அன்று துவங்கி 7.1.2011ம் தேதி வரை நடைபெறும் தேசிய அறியவில் காங்கிரஸ் மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார்.

 ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு குஜ்ஜர்கள் போராட்டம் நடத்தினர் 6.1.2011 அன்று போராட்டக்குழுத்தலைவர் பைசாலாவுக்கும் ராஜஸ்தான் அரசுக்கும் இடையே இன்று நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதையடுத்து, தங்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்ள குஜ்ஜார்கள் முடிவு செய்துள்ளனர். 

ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், தமிழகத்திற்கு மத்திய அரசு, 750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்) திட்டத்தைத் தொடர்ந்து, ஆர்.எம்.எஸ்.ஏ., (ராஷ்டிரிய மத்தியமிக் சிக்ஷா அபியான்) திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளை தரம் உயர்த்துதல், புதிய பள்ளிகளை அமைத்தல், போதிய ஆசிரியர்களை நியமித்தல், பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடங்களை கட்டுதல், பள்ளியில் அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட, பல்வேறு பணிகள், இத்திட்டத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.

ஜனவரி 04,2011  அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசாக்கள் அதிகரித்து ரூ. 44.67 என்ற அளவில்  உள்ளது

2010ம் ஆண்டுக்கான "திருவள்ளுவர் விருது' பா.வளன் அரசுக்கும், "பெரியார் விருது' சாமிதுரைக்கும், "அண்ணா விருது' ரவிக்குமார் எம்.எல்.ஏ.,வுக்கும், "அம்பேத்கர் விருது' யசோதா எம்.எல்.ஏ.,வுக்கும், "காமராஜர் விருது' ஜெயந்தி நடராஜன் எம்.பி.,க்கும், "பாரதியார் விருது' மம்மதுவுக்கும், "திரு.வி.க., விருது' அய்யாசாமிக்கும், "பாரதிதாசன் விருது' இளவரசுவுக்கும், "கி.ஆ.பெ.விசுவநாதம் விருது' மதிவாணனுக்கும் வழங்கப்பட்டது

 தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 4ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது

தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து மத்திய அரசு ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் கமிஷன் அமைத்தது. இந்த கமிஷன் தனது பரிந்துரையை உள்துறை அமைச்சரிடம் சமர்ப்பித்தது. இதன்படி ஆந்திராவை சீமந்திரா , தெலுங்கானா என 2 மாநிலமாக பிரிக்கலாம், ஐதராபாத்தை தெலுங்கானாவுக்கு தலைநகரமாக அறிவிக்கலாம், இல்÷லையேல் ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக அங்கீகரிக்கலாம்,

தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு, இந்தியாவில் முதன் முறையாக ஐ.எஸ்.ஓ.,-9001 விருது வழங்கப்பட்டுள்ளது. தலை சிறந்த நிர்வாகம், சிறப்பாக செயல்படும் வர்த்தக நிறுவனங்கள், அமைப்புகளுக்கு ஐ.எஸ்.ஓ., 9001 என்ற தரச் சான்று விருது வழங்கப்படுகிறது. இவ்விருது இந்தியாவிலேயே முதன் முறையாக, ஒரு மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

சீனாவில் சர்வதேச பனிச்சிற்ப கண்காட்சி நடைபெற்றது

ராமகிருஷ்ண பரமஹம்சரின், 175வது பிறந்த நாள் விழாவை, வரும் மார்ச் மாதம் சிறப்பாக கொண்டாட வும், சுவாமி விவேகானந்தரின், 150வது பிறந்த நாள் விழாவை, 2013 முதல் 2014ம் ஆண்டு வரை கொண்டாடவும் முடிவு செய்யப்பட்ள்ளது
கம்ப்யூட்டரை 20 மடங்கு வேகமாக இயங்க செய்யும் நுண்கருவியை (சிப்செட்) பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கம்ப்யூட்டர்களின் வேகத்தை பன்மடங்கு அதிகரிப்பது குறித்து, பிரிட்டனை சேர்ந்த கிளாஸ்கோ பல்கலைக்கழக விஞ்ஞானிகளும், அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இதில், தற்போதுள்ள நுண்கருவிகளை விட, 20 மடங்கு அதிக வேகத்தில் கம்ப்யூட்டரை இயங்க செய்யும் வல்லமை படைத்த புதிய நுண்கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமும் இணைந்து, 1983ம் ஆண்டு 560 கோடி ரூபாய் முதலீட்டில் தேஜஸ் இலகு ரக விமான வடிவமைப்பு திட்டம் துவங்கின. தேஜஸ், விமானப் படையிடம் 8.1.2011 அன்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் இந்த விமானம், போர்ப் படை பிரிவில் சேர்க்கப்பட உள்ளது.  2004ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இந்த விமானத்துக்கு, "தேஜஸ்' என பெயர் சூட்டினார்.

ஆப்ரிக்க நாடான சூடானை, இரண்டாகப் பிரிப்பது குறித்த கருத்துக் கணிப்பு ஓட்டெடுப்பு 8.1.2011 அன்று துவங்கியது. வரும் 15ம் தேதி வரை இந்த ஓட்டெடுப்பு நடக்கிறது. இத்தேர்தலில் 40 லட்சம் பேர் ஓட்டளிக்கின்றனர்.இத்தேர்தல் அமைதியான முறையில் நடக்கிறதா என்பதை பார்வையிட ஐ.நா., உயரதிகாரிகள், சூடானுக்கு வந்துள்ளனர்.

2011 சர்வதேச வன ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சிறுதுளி, ராக் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் "பசும் புலரி' என்ற திட்டத்தை துவக்கி ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க திட்டமிட்டுள்ளன

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், சிறந்த நூலாசிரியர்கள் மற்றும் அதன் பதிப்பாளர்களுக்கான பரிசுகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது. மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் பிரிவில், இலங்கையைச் சேர்ந்த கனகரத்தினம் (இவருக்கு சான்றிதழ் மட்டும்), நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு என்ற பிரிவில் திருநாவுக்கரசு, கணிதவியல், வானிலை, இயற்பியல், வேதியியல் ஆகிய பிரிவில் ஜெபா ராஜசேகர் உட்பட 31 பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூலாசிரியர்கள், அதை வெளியிட்ட பதிப்பாளர்கள் ஆகியோருக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜன. 12, இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை சார்பில், அனைத்து புதுப்பிக்கத்தக்க சக்திகள் குறித்த, "வளி ஒளி வாயு-2011' எனும் தலைப்பிலான சர்வதேச கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், சென்னை வர்த்தக மையத்தில் 14ம் தேதி நடைபெற்றது

பிரேசில் நாட்டில் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி 350 பேர் பலியாயினர்

காமன்வெல்த் ஊழல் தொடர்பாக விசாரிப்பதற்காக சுங்குலு கமிட்டியை பிரதமர் அமைத்தார்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண கவர்னராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நம்ரதா நிக்கி ஹாலே பதவி ஏற்றுள்ளார்

லெபனானில் ஆளும் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் ஷாத்ஹராரியின் ஆட்சி கவிழந்துள்ளது. 

தி லான்செட் எனும் பிரிட்டிஷ் பத்திரிகை ஹார்ட் அட்டாக் ( மாரடைப்பு ) நோய் பற்றி ஒரு ஆய்வு மேற்கொண்டது. ஆய்வில் ஓ குரூப் ரத்த வகை இருப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என தெரியவந்துள்ளது. இது குறித்த ஆய்வு கட்டுரையில் ஓ குரூப் ரத்த வகையில் இருக்கும் ஒரு வகை என்சைம் ஹார்ட் அட்டாக் நோய் உண்டாவதை வெகுவாக குறைக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாம்பழத்துக்கு சச்சின் பெயர் வைத்து, ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்திய உ.பி., விவசாயி கலிமுல்லா கான், தற்போது இனிப்பு மிக்க புதிய ரக கொய்யாப் பழத்துக்கு முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா பெயரைச் சூட்டியுள்ளார். வித்தியாசமான சுவை, உருவங்களில் 300க்கும் மேற்பட்ட ரகங்களில் மாம்பழத்தை விளைவித்து, சாதனை படைத்ததற்காக, இவருக்கு பத்மஸ்ரீ விருதும் கிடைத்துள்ளது

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அதிகளவு சிசு மரணங்கள் நிகழ்வதாகவும், மலைக்கிராமங்களில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளுக்கு 104 குழந்தைகள் இறப்பதாகவும், சென்னையை சேர்ந்த, "குழந்தைகள் உரிமைகளும், நீங்களும்' என்ற அமைப்பு, அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு வந்த காமசூத்ரா என்றழைக்கப்பட்ட கம்ப்யூட்டர் வைரஸ் கிருமிகளால் ஏராளமான கம்ப்யூட்டர்கள் செயல் இழந்தன. அது போன்ற வைரஸ் மீண்டும் அதேபெயரில் வந்துள்ளதாக இத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வந்துள்ள வைரஸ் கிருமி Real kamasutra.pps.exe என்ற பெயரில் வந்துள்ளது என்றும் இது போன்ற வைரஸ் கிருமிகள் பெரும்பாலும் டவுன்லோடு செய்யும் பைல்களை மட்டுமே அழிக்க கூடியதாக உள்ளது என்றும் தனிப்பட்ட பைல்களையும் அழிக்க கூடியதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்

அரபு நாட்டு பயோ டெக்னாலஜி நிறுவனம் புற்று நோய் மருத்துவம் பற்றி ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் ஒட்டக பால் மற்றும் சிறுநீரில் இருந்து மருந்து தயாரிக்கப்பட்ட மருந்து புற்று நோயை குணமாக்குவதாக தெரிவித்துள்ளது

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான "ஆசியான்' அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், 16.1.2011 அன்று இந்தோனேசியாவின் லொம்பாக் தீவில் நடந்தது "மியான்மர் மீதான பொருளாதாரத் தடைகள் கைவிடப்பட வேண்டும்' என்று, "ஆசியான்' அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூறியுள்ளனர். 
எதிர்கால எரிசக்தி தேவை குறித்த உலக மாநாடு- -2011 ஐக்கிய அரபு எமிரேட் நாடான அபுதாபியில் 17.1.2011 அன்று  தொடங்கியது. 

2010 ம் ஆண்டில் மட்டும், சர்வதேச கடற்பகுதியில் 1,181 கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பான்மையான கடத்தல்கள், சோமாலிய கடற்கொள்ளையர்களால் நிகழ்த்தப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், அச்சு மற்றும் எழுதும் காகித உற்பத்தியில் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது,
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதியை, தேசிய வாக்காளர் நாளாக கடைபிடிப்பது என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது

மன்னார் வளைகுடாவில் பவளப்பாறைகளை கொன்று வரும், "கப்பாபைகஸ் ஆல்வரேசி' பாசியை அகற்ற, சிறப்பு நிதி கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.மன்னார் வளைகுடாவில் 560 சதுர கி.மீ., பரப்பளவில் பவளப்பாறைகள் படர்ந்து காணப்படுகின்றன. புவி வெப்பமயமாவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பவளப்பாறைகள், சமீப காலமாக அழிந்து வருகின்றன.

கூகுள் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ., வாக லேரி ‌பேஜ் பதவியேற்கிறார். இணையதள ஜாம்பவானான கூகுளின் நிறுவனர் எரிக் ஸ்மிட் சி.இ.ஓ., பதவியில் இருந்து விலகப்போவ‌தாக தெரிவித்துள்ளார்
தகவல்தொழில்நு‌ட்பத்தில் சிறந்து விளங்கும் மகாராஷ்டிராவின் புனே நகரத்தில் மற்றுமொரு பரிமாணமாக, "எனி டைம் மில்க்" எனும் பால் மற்றும் பால் பொருட்கள் 24 மணிநேரமும் கிடைக்கத்தக்க வகையில், மெசின்கள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில், இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது

மதுரையில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை சார்பில் பிளாஸ்டிக் பார்க் அமைய வாய்ப்புகள் உள்ளன,'' என மத்திய அரசு செயலாளர் ராமன் தெரிவித்தார்.
 இந்தியாவின் முன்னணி இந்துஸ்தானி இசைக்கலைஞரும், பிரபல பாடகருமான பீம்சென் ஜோஷி, காலமானார்.

சிங்கப்பூரில், செயல்பட்டு வந்த காந்திஜியின் நினைவுக் கட்டடம் சீரமைக்கப்பட்டு, மீண்டும் 22.1.2011ல் திறந்து வைக்கப்பட்டது. சிங்கப்பூரில் காந்திஜி நினைவுக் கட்டடம் கடந்த 1953ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டடத்தில், காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் எழுதிய புத்தகங்கள் கொண்ட நூலகம் செயல்படுகிறது.

இத்தாலியின் புகழ்பெற்ற லியானார்டோ டாவின்சியின் பிரபலமான மோனாலிசா ஓவியத்தைப் பற்றி, அந்த ஓவியத்துக்கு யார் "மாடலாக' இருந்தனர், ஓவியத்தின் பின்னணிக் காட்சிகள் கற்பனையா உண்மையா என்பன போன்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளனஇத்தாலியின் ப்ளோரன்ஸ் நகரில் வாழ்ந்த லிசா டெல் ஜியோகாண்டோ என்ற பெண்ணைத் தான் டாவின்சி "மாடலாக' பயன்படுத்தினார் என்று நம்பப்படுகிறது.

சர்வதேச அளவில் ஐ பாட் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஆப்பிள் நிறுவனம், தங்களது ஆப்பிள் ஆப் ஸ்டோரின் மூலம் 10 பி்ல்லியன் டவுன்லோடுகள் கடந்து சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
2010-11 நிதியாண்டு, 4 ம் காலாண்டுக்கான பொருளாதார கொள்கையை ரிசர்வ் வங்கி 24,1,2011 அன்று அறிவித்தது. குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்‌லை. 2010 - 2011ம் ஆண்டுக்கான நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துக் கூறியுள்ளது. நாட்டின் பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரிக்கக்கூடும் எனவும் கூறியுள்ளது.

பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் படி கிரிக்கெட் வீரர் லஷ்மண், குத்துசண்டை வீரர் சுசில் குமார், துப்பாக்கி சுடும் வீரர் ககன் நரங், பின்னணி பாடகி உஷா உதுப், நடிகர் இர்பான் கான், நடிகைகள் கஜோல், தபு மற்றும் கிருஷ்ண பூர்ணியா, சுமன் சகாய், பேராசிரியர் ஐ ஏ சித்திக், கோபாலன் நாயர் சங்கர், மெக்கா ரபிக் அஹமத், கைலாசம் ராகவேந்தர ராவ், நாராயண் சிங்பாட்டி, பி கே சென், ஷிடல் மகாஷன், குஞ்சராணி தேவி, ஹர்பஜன் சிங், புக்ராஜ் பப்னா, மன்சூர் ஹசன்,ஷயாமா பிரசாத் மண்டல், சிவபாதம் விட்டல், மடனூர் அகமது அலி, இந்திரா இந்துஜா, ஜோஸ் கேகோபெரியபுரம், ஏ மார்தண்டா பிள்ளை,மகிம் போரா, புலேலா ஸ்ரீராமா சந்துருது, ப்ரவிண் டார்ஜி, சந்திரா பிரகாஷ் தேவல், பல்ராஜ் கோமல், ரஞ்சி குமார், தேவநூறு மகாதேவா, பருன் மஜதும்தார், அவ்வை நடராஜன் உள்ளிட்ட 84 ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொழிலதிபர் அசிம் பிரேம்ஜி, பிரிஜேஸ் மிஸ்ரா,டாக்டர் கபிலா வத்சயன், மறைந்த பொருளாதார நிபுணர் எல் சி ஜெயின், சிதாகாந்த் மகாபட்ரா, ஏ ஆர் கித்வாய், முன்னாள் நிதி குழு தலைவர் விஜய் கேல்கர், ஹோஙமய் தாராவல்லா, ஏ.நாகேஸ்வர ராவ், பிரசரன் கேசவ ஐயங்கார், பரே ராம ராவ், ஓட்டப்லக்கல் என் வி குருப் ஆகியோருக்கு பத்மவிபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திட்டக்குழு துணை தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, சத்யதேவ் துபேய், இசையமைப்பாளர் கயாம், நடிகர்கள் சசி கபூர் , வகிடா ரெஹ்மான், சி வி சந்திரசேகர், ஐ டிசி தலைவர் ஓய் சி தேஷ்வர், ஐசிசிஐ வங்கி நிர்வாக இயக்குநர் சந்தாக் கொச்சர், டாக்டர் ராம்தாஸ் பாய், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஷ்யாம் சரண், கிரிஷேன் கண்ணா, ருத்ரபாட்னா கிருஷ்ணா எஸ் ஸ்ரீகந்தன், அர்பிதா சிங், பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம், விஜேன் முகர்ஜி, ராஜஸ்ரீ பிர்லா, ஷோபனா ராணடே, சூர்யநாராயண ராமசந்திரன், எஸ் கோபாலகிருஷ்ணன், யோகேஷ் சந்தர் தேவேஷ்வர், கே அஞ்சி ‌ரெட்டி, அனல்ஜித் சிங், ராஜேந்திர சிங் பவார், குணபதி வி கிருஷ்ண ரெட்டி, அஜய் சவுத்ரி, சுரேந்திர சிங், எம் என் புச், தாயில் ஜாகோப் சோனி ஜார்ஜ், சங்கா கோஷ், மறைந்த கே ராகவன் திருமுல் பாண்ட், மறைந்த டாக்டர் கேகீ பீரம்ஜி கிராண்ட் மற்றும் மறைந்த தஷ்ரத் படேல் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் ஒருங்கிணைப்பு தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சுரேஷ் கல்மாடி,  இந்திய ஒலிம்பிக் கமிட்டி தலைவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மொழி எழுத்துக்கள் மற்றும் கிரந்த எழுத்துக்களின் கணினி வழி பயன்பாட்டுக்காக, "யூனிகோட் கன்சார்டியம்' என்ற நிறுவனம் ஒருங்குறி அட்டவணையில் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து கருத்துக்களையும் ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி மோகன் தலைமையில், தமிழ் பல்கலை துணைவேந்தர் ராஜேந்திரன், முன்னாள் துணைவேந்தர்கள் குழந்தைசாமி, ஆனந்தகிருஷ்ணன், கோதண்டராமன் மற்றும் ஐராவதம் மகாதேவன், கந்தசாமி, நாச்சிமுத்து, மணவாளன், நக்கீரன், பொன்னவைக்கோ, வைரமுத்து, அரவிந்தன், மணிவண்ணன், தெய்வசுந்தரம் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக, தகவல் தொழில்நுட்ப துறை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் 62வது குடியரசு தின விழா 26,1,2011 ன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது
மழை, வெள்ளம், பூகம்பம் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட 28 நாடுகளுக்கு மனிதாபிமான அவசரகால உதவி செய்வதற்காக ரூ. 7.4 பில்லியன் டாலர் நிதி தரும்படி ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளை ஐ.நா.பொதுச்செயலாளர் பான்கீ-மூன் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகின் அமைதி மற்றும் நன்மைக்காக இந்தியாவுடன் அமெரிக்கா புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை ஒழிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்தியாவுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்கள் மேலும் பலப்படுத்தபட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ரஷ்யாவுடன் புதிய ஒப்பந்தகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார். 

இந்திய விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களான ஐ.எஸ்.ஆர்.ஓ., மற்றும் டி.ஆர்.டி.ஓ., சார்ந்த ஒன்பது நிறுவனங்கள் மீதான தடையை அமெரிக்கா 25.1.2011 அன்று நீக்கியது. இதன் மூலம் இருதரப்புக்கும் இடையில் இனி உயர் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை அதிகரிக்கும். கடந்த 1998ல் இந்தியாவின் "பொக்ரான்' அணு குண்டு சோதனைக்குப் பின் அமெரிக்கா, இந்திய பாதுகாப்பு மற்றும் விண்வெளி சார்ந்த நிறுவனங்கள் பலவற்றுடனான வர்த்தகத் தொடர்பு மற்றும் ஒத்துழைப்புக்குத் தடை விதித்தது.

உலக பொருளாதார அமைப்பின் சார்பில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு கிறிஸ்டல் விருது வழங்கப்பட்டது. இந்த அமைப்பின் கூட்டம் சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் தொடங்கியது. இந்த கூட்டத்தில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலக பொருளாதார அமைப்பின் சார்பில் கிறிஸ்டல் விருது வழங்கப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசைத் துறையில் படைத்த சாதனைகளுக்காக மட்டுமின்றி அவரது சமூக சேவையைப் பாராட்டியும் இந்த விருது வழங்கப்பட்டது. 
"காஷ்மீரில் விவசாய நிலங்களை பாதுகாக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும்,'' என, அம்மாநில விவசாய அமைச்சர் குலாம் ஹசன் மீர் கூறியுள்ளார். 

"செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் இறங்கி ஆய்வு செய்து திரும்புவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம்,'' என, அமெரிக்காவின் நாசா விண்கல ஏவுதளத்தின் விஞ்ஞானி டாக்டர் எத்திராஜ் வெங்கடபதி கூறினார்.
தேசிய மாணவர் படையினரின் எண்ணிக்கை 15 லட்சமாக உயர்த்தப்படும்' என, பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்

இந்தியாவி்ன் முன்னணி கர்நாடக இசைக்கலைஞரும், திரைப்பட பின்னணி பாடகருமான ஜேசுதாசிற்கு, கேரள அரசு, இசைத்துறையின் மிக உயரிய விருதான "சுவாதி புரஸ்காரம்" விருது வழங்கி கவுரவிக்கிறது. மிருதங்க இசைக்கலைஞர் உமையாள்புரம் சிவராமன் தலைமையிலான குழு, இந்த விருதுக்கு ஜேசுதாசை தேர்ந்தெடுத்துள்ளது.