Tuesday 10 May 2011

இந்திய தேசிய இயக்கம்

சுதந்திர போராட்ட வீரர்கள்

அன்னி பெசன்ட் அம்மையார்.
1847ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி லண்டனில் பிறந்தார் அன்னி பெசன்ட். இவரது பெற்றோர் டாக்டர் வில்லியம் பேஜ்வுட்- தாயார் எமிலி.1866ல் பிராங்க்பெசண்ட் என்பவரை  திருமணம் செய்து கொண்டார்.சமூக சேவையில் ஆர்வம் கொண்டு 1875 நவம்பர் 17ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள பிரம்ம ஞான சபையில் இணைந்தார். மத நல்லிணக்கம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்ட இந்த அமைப்பின் தலைவராக 1891ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். இதன் பின்னர் மத நல்லிணக்கத்தை பரப்பும் நோக்கில் இந்தியா வர விரும்பினார் அன்னி பெசன்ட். இதற்காக அப்போதைய ஆங்கில அரசுடன் கடுமையாக போராடி அனுமதி பெற்று, 1893ம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி இந்தியா வந்திறங்கினார். 1913இல் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார். 1917இல்  மாதர் சங்கம் அமைத்தார் .பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல், தீண்டாமை போன்றவற்றையும் எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்தார் அன்னி பெசன்ட்.பெண் கல்வி‌க்காக சிறப்புக் கவனம் செலுத்தினார். இதற்காக 1898இல் காசியில் மத்திய இந்துக் கல்லூரி, 1904இல் மத்திய உயர் நிலைப்பள்ளி ஆகியவற்றை அமைத்தார். "இந்தியாவே விழித்தெழு" என்பதுதான் அவரது சொற்பொழிவின் சாராம்சம். 1904இல் 'பொதுநலம்' என்ற வார இதழையும், 'புது இந்தியா' என்ற நாளிதழையும் தொடங்கினார். சுதந்திர வேட்கையை மக்களிடம் தூண்டுவதற்காக இப்படி அவர் நடத்திய பத்திரிகைகளின் எண்ணிக்கை 18. இதுதவிர, ராமாயணம், மகாபாரதம், இதிகாசங்கள், வீரர்கள், பெண்கள் போன்ற தலைப்புகளில் அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 362   அன்னி பெசன்ட் அம்மையார் 1933 செப்டம்பர் 20ஆம் தேதி தனது 86ஆம் வயதில் மரணம் அடைந்தார்.

வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌ன்: 
பா‌ஞ்சால‌‌ங்கு‌றி‌‌ச்‌சி பாளை‌ய‌த்தை ஆ‌ட்‌சி செ‌ய்து வ‌ந்த ‌வீர‌பா‌‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌ன்ஆ‌ங்‌கிலேய‌ர்களு‌க்கு வ‌ரி செலு‌த்த மறுத்து வ‌ந்தா‌ர்.ஆ‌ங்‌கிலேய‌ரி‌ன் வரி வசூ‌ல் கொ‌ள்கையே ஆ‌ங்‌கிலேயரு‌க்கு‌ம்,க‌ட்டபொ‌ம்மனு‌க்கு‌ம் இடையே ‌விரோத‌ம் ஏ‌ற்பட மு‌க்‌கிய காரணமாக அமை‌ந்தது. ராமநாதபுர‌ம் ஆ‌ட்‌சிய‌ர் வ‌ரியை உடனடியாக செலு‌த்துமாறு ‌வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்மனு‌க்கு பல கடித‌ங்க‌ள் எழு‌தினா‌ர். ஆனா‌ல் க‌ட்டபொ‌ம்ம‌ன் அவ‌ற்றை ‌நிராக‌ரி‌த்தா‌ர். இதனா‌ல் கோபமு‌ற்ற ‌திருநெ‌ல்வே‌லி மா‌வ‌ட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர் கா‌லி‌ன் ஜா‌க்ச‌ன் த‌ம்மை நே‌‌ரி‌ல் ச‌ந்‌தி‌க்கு‌மாறு ‌வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்மனு‌க்கு க‌ட்டளை‌யி‌ட்டா‌ர்.ஆ‌ங்‌கிலேய‌ர் ஜா‌க்ச‌ன் கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்தவேண்டுமென்றே ல இடங்களுக்கு அலைக்கழித்தார். இறு‌தியாக  ‌ ‌வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌ன் ராமநாதபுர‌ம் எ‌‌ன்ற இட‌த்‌தி‌ல் ஜா‌க்சனை‌ச் ச‌ந்‌தி‌த்தா‌ர். அ‌ங்கு க‌ட்டபொ‌ம்ம‌ன் ஆ‌ங்‌கிலேய‌ரி‌ன் வ‌ரி வசூ‌லி‌ப்பை எ‌தி‌ர்‌த்து ஜா‌க்ச‌னிட‌ம் கடுமையாக வா‌தி‌ட்டா‌ர். இதனா‌ல் ஆ‌த்‌திரமடை‌ந்த ஜா‌க்ச‌ன் க‌ட்டபொ‌ம்மனை சூ‌ழ்‌ச்‌சி‌‌யி‌ன் மூல‌ம் கைது செ‌ய்ய ‌நினை‌த்தா‌ர். ஆனா‌ல் க‌ட்டபொ‌ம்ம‌ன் அ‌ங்‌கிரு‌ந்து த‌ந்‌திரமாக த‌ப்‌பி‌த்து‌ச் செ‌ன்றா‌ர்.இதையடு‌த்து க‌ட்டபொ‌ம்ம‌ன் மருது சகோதர‌ர்களுட‌ன் இணை‌ந்து ஆ‌ங்‌கிலேய‌ர்களு‌க்கு எ‌திராகப் போர் தி‌ட்ட‌ம் ‌‌‌‌தீ‌ட்டினா‌ர். க‌ட்டபொ‌ம்ம‌ன் ‌சிவ‌கி‌ரி பாளைய‌த்தை தனது கூ‌ட்டமை‌ப்‌பி‌ல் சே‌ர்‌ப்பத‌ற்காக ‌சிவ‌கி‌ரி ‌மீது படையெடு‌த்து‌ச் செ‌‌ன்றா‌ர். ஆனா‌ல் ‌சிவ‌கி‌ரி பாளைய‌ம் ஆ‌ங்‌கிலேய‌ர்களு‌க்கு வ‌ரி செலு‌த்து‌ம் பாளையமாக இரு‌ந்ததா‌ல் ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ள் க‌ட்டபொ‌ம்ம‌னி‌ன் படையெடு‌ப்பை த‌ங்களது அ‌திகார‌த்‌தி‌ற்கு எ‌திரான ஒரு சவாலாக கரு‌தி‌ த‌ங்களது படைகளை ‌திருநெ‌ல்வே‌லி ‌மீது படையெடு‌க்குமாறு கட்டளை‌யி‌ட்டன‌ர். மேஜ‌ர் பான‌‌ன் தலைமை‌யிலான ஆ‌ங்‌கிலேய படைக‌ள் பா‌ஞ்சால‌ங்கு‌றி‌ச்‌சி கோ‌ட்டையை மு‌ற்றுகை‌யி‌ட்டது. பான‌ர்மேன் க‌ட்டபொ‌ம்மனை சரணடையுமாறு கோ‌ரினா‌‌ர். ஆனா‌ல் க‌ட்டபொ‌ம்ம‌ன் அதனை ஏ‌ற்க மறு‌த்து அ‌ங்‌கிரு‌ந்து த‌ப்‌பி‌த்து‌ச் செ‌ன்று பு‌து‌க்கோ‌ட்டை‌யி‌ல் உ‌ள்ள கள‌ப்பூ‌ர் கா‌ட்டி‌ல் தலைமறைவாக இரு‌ந்தா‌ர். இ‌ந்‌நிலை‌யி‌ல் புது‌க்கோ‌ட்டை அரச‌ர் விஜய ரகுநாத தொ‌ண்டைமா‌ன் க‌ட்டபொ‌ம்மனை கைது செ‌ய்து ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ளிட‌ம் ஒ‌ப்படை‌த்தா‌ர். இ‌ப்படியாக ஆ‌ங்‌கிலேயரை எ‌தி‌ர்‌த்து பலவகை‌யிலு‌ம் போராடிய ‌வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌ன் 1799ஆ‌ம் ஆ‌ண்டு ‌அ‌க்டோப‌ர் மாத‌ம் 16ஆ‌ம் தே‌தி கய‌த்தாறு கோ‌ட்டை‌யி‌ல் தூ‌க்‌கி‌லிட‌ப்ப‌ட்டா‌ர். 

வ. உ. சிதம்பரம்பிள்ளை
கப்பல் ஓட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் தமிழர்களால் அறியப்பட்டவர்.சென்னையில் விவேகானந்தர் மடத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ணானந்தரின் சந்திப்பு வ.உ.சியின் உள்ளத்தில் விடுதலைக் கனலை ஓங்கச் செய்தது. அதன்பிறகே அவர் வாழ்வில் புது அத்தியாயம் தொடங்கியது. தூத்துக்குடி திரும்பியதும், கைத்தொழில்சங்கம், தருமசங்கம், நூல்நூற்பு நிறுவனம், தேசியப் பண்டகசாலை ஆகியவற்றை நிறுவி சுதேசியம் வளர்க்க ஆரம்பித்தார். வந்தே மாதர முழக்கங்களைத் துணிகளில் எழுதச் செய்து வீதிகள் தோறும் வீடுகள் தோறும் தேசிய உணர்வை வளர்த்தார். பாலகங்காதர திலகரின் விடுதலைப் போராட்டத்தில் மனதைபறிகொடுத்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தி்ற்காகப் பாடுபட்டார்.ஆங்கிலேய ஆதிக்கம் கடல்வழி வணிகத்தினால் தான் வளர்ந்தது என்கிற அடிப்படையில், அவர்களை விரட்ட, அவர்களுடைய கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக, 1906-ஆம் ஆண்டு "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்கிற சங்கத்தை நிறுவி அதன் செயலாளர் ஆனார். (அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர் பாண்டிதுரை தேவர்  சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார். அந்தக் கம்பெனியின் சார்பில் காலியா, லாவோ ஆகிய இரண்டு கப்பல்களை வாங்கி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இயக்கத் தொடங்கினார். அதனால் கப்பலோட்டிய தமிழன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.  ஆங்கிலேய அரசு, 1908-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் நாள் விபின் சந்திரபாலர் விடுதலைக் கொண்டாட்டத்தின் போது அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர்மேல் வழக்குப் பதிவு செய்து,                   இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்தது.தீர்ப்பளித்தவர் திருநெல்வேலி ஜில்லா செஷன்ஸ் நீதிபதி ஏ.எஃப்.ஃபின்ஹே.அந்தத் தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டின் போது அந்தமான் அனுப்ப இயலாது என்பதால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார் வ.உ.சி. அங்கே தான் செக்கிழுக்க வைக்கப்பட்டார்.எனவே  செக்கிழுத்த செம்மல்  என்று அழைக்கப்பட்டார் . சென்னை உயர் நீதிமன்றம் அவருடைய தண்டனைக் காலத்தைப் பத்தாண்டுகளாகவும், லண்டன் பிரிவியூ கவுன்ஸில், ஆறு ஆண்டுகள் கடுங்காவலாகவும் குறைத்தன
 கோபால கிருஷ்ண கோகலே
கோபால கிருஷ்ண கோகலே, 1866 ஆம் ஆண்டு மே 9 அன்று மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள   கோதாலுக்கில் பிறந்தார்,  1884 ஆம் ஆண்டில் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் தன் பட்டப்படிப்பை முடித்தார். கோவிந்த் ரணடேவின் ஆதரவாளராக கோகலே இருந்தார் . 1889 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினரானார்.அவர் தன்னுடைய எண்ணங்களில் மற்றும் மனப்பான்மையில் மிதமானவராக இருந்தார், இந்தியர்களின் உரிமைகளுக்கு ஆங்கிலேயர்களின் பெருமளவு மரியாதையைப் பெற்றுத்தரக்கூடிய பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல் செயல்முறையை வளர்த்தெடுப்பதன் மூலம் ஆங்கில அதிகாரிகளிடத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற எண்ணினார். 1895 இல்கோகலே திலகருடன் இணைந்து காங்கிரசின் இணைச் செயலாளர் ஆனார்.இருவருமே கணித பேராசிரியர்களானார்கள் மற்றும் இருவருமே டெக்கன் கல்வி அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர். 1905 ஆம் ஆண்டில் கோகலே இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவரானார்.1907 இல்காங்கிரஸ் இரண்டாக உடைந்தது: கோகலே மற்றும் திலகர் முறையே காங்கிரசின் மிதமானவர்கள் மற்றும் "தீவிரவாதி"களின் தலைவரானார்கள்கோபால கிருஷ்ண கோகலே இந்தியச் சேவகர்கள் அமைப்பினை ஏற்படுத்தினார். 1899 ஆம் ஆண்டில், கோகலே மும்பை சட்ட பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1903 ஆம் ஆண்டு மே 22 அன்று அவர் இந்திய கவர்னர் ஜெனரலின் இந்தியப் பேரவைக்கு மும்பை பிராந்தியத்தை பிரதிநிதிக்கும் வகையில் பதவிவகிக்காத உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாத்மா காந்தி வளர்ச்சிபெற்று வந்த ஆண்டுகளில் கோகலே அவருக்கு மிகப் பிரபலமான அறிவுரையாளராக இருந்து வந்தார்.தன்னுடைய சுயசரிதையில் காந்தி, கோகலேவை தன்னுடைய அறிவுரையாளர் மற்றும் வழிகாட்டி எனக் குறிப்பிடுகிறார்1915 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் நாள் கோகலே தம்முடைய நாற்பத்து ஒன்பதாவது வயதில் இறந்தார் 
தாதாபாய் நௌரோஜி 
(Poverty and Un-British Rule in India) என்ற நூலினை எழுதினர் . 1870 ஆம் ஆண்டு இந்தியாவின் தலா வருமானத்தைக் கணக்கிட்டு ரூ.20 என்று கக்கிட்டார் .இந்தியாவின் பொருளாதார வள ஆதாரங்கள் சுரண்டப்படுகின்றன என்று முதன் முதலில் பட்டியலிட்டார். காந்தி  தாதாபாய் தனக்குத் தலைவர் என்றும் வழிகாட்டி என்றும் குறிப்பிட்டார். 
லாலா லஜபத் ராய்
லாலா லஜபத் ராய், 1865 ஆம் ஆண்டு சனவரி 28 ஆம் தேதி, இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் துதி கே என்னும் ஊரில் பிறந்தார்.1888 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினரானார்.  திலகர், பிபின் சந்திர பால் மற்றும் லாலா லஜபத் ராய் ஆகியோரை லால்-பால்-பால் என அழைப்பர். 1927 இல் சைமன் குழு இந்தியாவிற்கு வந்த போது நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்தில் தடியடி பட்டு இறந்தார் 
பகத் சிங் 
  செப்டம்பர் 27, 1907 இல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லயல்புரில் பிறந்தார்.இவர்  இந்தியாவின் முதலாவதுமாக்ஸ்யாவதி என சில வரலாற்றாசிரியர்களால் குறிக்கப்படுவதுண்டு லாலா லஜபத் ராய்இறப்புக்குக் காரணமாயிருந்த  உதம் சிங் என்ற காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது வயதில் தூக்கிலிடப்பட்டார்.

வரலாற்று தகவல்கள் 
பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப்காமன்ஸுக்கு தேர்வுசெய்யப்பட்ட முதல் இந்தியர் - தாதாபாய் நவுரோஜி

வேலூர் புரட்சியின் போதுசென்னை கவர்னராகஇருந்தவர்-  வில்லியம் பென்டிங்
1857 கலகத்தின் போது பீகாரின்புரட்சிக்கு தலைமை ஏற்றவர் -கன்வர் சிங்
கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு-1922
முதல் வட்ட மேசை மாநாடு நடந்த போது இந்திய வைசிராயாகஇருந்தவர்- ரீடிங் பிரபு
சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் - சி.ஆர். தாஸ் nkhnkhpjy
மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என முதலில் கூறியவர்- சுபாஷ் சந்திர போஸ்
இந்தியாவின் முதல் வைசிராய் -கானிங் பிரபு
அம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு-1623
கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி தலைமை ஆளுநர்-கானிங் பிரபு
இந்தியாவின் அலுவல் மொழியாக ஆங்கிலம் மாற்றப்பட்ட ஆண்டு-1835
 காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட போது இந்தியாவின் வைசிராய்- டஃப்ரின் பிரபு
விக்டோரியா பேரரசியின் மகாசாஸன அறிக்கை படிக்கப்பட்ட இடம்-அலகாபாத்
மாகாண சட்டமன்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு-1861
காங்கிரசில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் இணைந்த ஆண்டு-1916
 வந்தவாசி வீரன் என்று அழைக்கப்படுபவர் - சர் அயர் கூட்
 சைமன் குழு வருகையை எதிர்த்து போராட்டம் நடத்திஉயிரிழந்தவர்-லாலா லஜபதி ராய்
வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தது  - 1921 நவம்பர்
இந்தியாவின் முதல் தேசியக் கவி என அழைக்கப்படுபவர் -ஹென்றி விவியன் டிரெசியோ
இந்தியாவில் பதவியிலிருக்கும் போது படுகொலை செய்யப்பட்டஒரே வைஸ்ராய்  - மயோ
இந்தியா சுதந்திரம் பெற்ற போது இங்கிலாந்தின் பிரதமராகஇருந்தவர் - அட்லி
பாகிஸ்தான் என்னும் முஸ்லிம்களுக்கான தனி நாடு கோரிக்கையைமுஸ்லிம் லீக்  கோரியது-  1940
வந்தே மாதரம் இயக்கம் எங்கே நடைபெற்றது - ஐதராபாத்
மகாத்மா காந்தி தலைவராக பங்கேற்ற ஒரே காங்கிரஸ் மாநாடுஎங்கு நடைபெற்றது- பெல்காம்
சிப்பாய் கலகத்தின் போது மத்திய இந்தியாவில் புரட்சிக்குதலைமையேற்றவர்-ராணி லட்சுமிபாய்
 டல்கௌசி பிரபுவினால் அறிமுகப்படுத்தப்பட்டது-வாரிசு இழப்பு கொள்கை
இராஸ்த் கோப்தார் என்பது பத்திரிகை
இந்திய ஆயுத சட்டம் கொண்டு வந்தவர் -லிட்டன் பிரபு
ஹண்டர் கல்வி குழு நியமிக்கப்பட்ட ஆண்டு -1881
1674ம் ஆண்டு பாண்டிச்சேரியை அமைத்தவர் -பிரான்சிஸ் மார்டின்
1767ல் செங்கத்தில் ஹைதர் அலியை தோற்கடித்த ஆங்கிலேயர் -ஸ்மித்
1857-ம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போர்கானிங்பிரபு (Lord Canning) காலத்தில் (1856-62) நடந்தது.
காங்கிரசின் ஆரம்பகாலமான 1885-லிருந்து 1905வரையிலான காலத்தை மிதவாதிகளின் காலம்
1905-லிருந்து 1919 வரை தீவிரவாதிகள் காலம் 
1919-லிருந்து 1947 வரை காந்தியின் காலம் 
அரவிந்த் கோஷ் இந்தயாவில் தீவிரவாத தேசியம்தோன்றக் காரணமாக இருந்தவர்
1907 சூரத் மாநாட்டில் ராஷ்பிகாரி கோஷ் தலைமையில்மிதவாதிகளும்அரவிந்த கோஷ் தலைமையில்தீவிரவாதிகளும் தனித்தனியாக தீர்மானங்கள்இயற்றியதால் காங்கிரசில் பிளவு ஏற்பட்டது1915-ம் ஆண்டு பம்பாயில் சின்கா தலைமையில் கூடியகாங்கிரஸ் மாநாடு தீவிரவாதிகளை மீண்டும்காங்கிரசில் சேர்க்க அனுமதித்தது
பகத்சிங்பி.கேதத் ஆகியோர் மத்திய சட்ட மன்றத்தில்வெடிகுண்டை வீசி கைதாயினர்பின்னர் 1931, மார்ச் 23அன்று பகத்சிங்சுக்தேவ்ராஜகுரு ஆகியோர் மூவரும்தூக்கிலிடப்பட்டனர்
1905-ம் ஆண்டு சியாம்ஜி கிருஷ்ணவர்மா லண்டனில்இந்திய இல்லத்தை தொடங்கினார்.இது பயங்கரவாதிகளின் புரட்சி மையமாகவும்பயன்பட்டு வந்தது.
அமெரிக்காவில் 1913-ம் ஆண்டு சோகன் சிங் பக்னாகாதர் கட்சியைத் தோற்றுவித்தார்இதன் பொதுச்செயலாளரான லாலா ஹர்தயாள் புரட்சிவாதக்கருத்துகளைப் பரப்பி வந்தார்.
தாகூர் வங்கப் பிரிவினையை எதிர்த்து அமர்சோனார் பங்களா என்றபாடலை இயற்றினார்
வங்காளப் நவாப் சலிமுல்லாகானின் முயற்சி யால்முஸ்லீம் மக்களுக்காக 1906 டிசம்பர் 30-ல் அகில இந்தியமுஸ்லீம் லிக் (All India Muslim League) அமைக்கப்பட்டது.அதன் நிரந்தரத் தலைவராக ஆகாகான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1919 மார்ச் மாதம் பம்பாயில் சத்யாகிரக சபைதோற்றுவிக்கப்பட்டது. 1919 மார்ச் 30-ம் நாள் சத்யாகிரகநாளாக அனுசரிக்க காந்தி மக்களைக் கேட்டுக்கொண்டார்
1920 மார்ச் 10-ம் நாள் கிலாபத் இயக்கம் பின்பற்றுவதற்கான செயல்திட்டத்தை (Gandhi's Manifesto)காந்தி வெளியிட்டார்
கிலாபத் இயக்கத்தின் ஒரு பகுதியாக மலபாரில்நடைபெற்ற ஒரு பயங்கரவாத நிகழ்ச்சியே மாப்ளாகலகம் ( 1921 ) எனப்படும்.
ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி 1992 பிப்ரவரி 12-ல்கைவிடுவதாக அறிவித்தார்
உப்புச் சத்தியாகிரகத்தின்கீழ் காந்தியின் தண்டியாத்திரை1930 மார்ச் 12-ம் நாள் 78 உறுப்பினர்களுடன் சபர்மதிஆசிரமத்தில் தொடங்கியது.
தமிழ்நாட்டில் ராஜாஜி நூறு தொண்டர்களுடன்திருச்சியிலிருந்து வேதாரண்யத்திற்குச் சென்றுஉப்புச்சட்டத்தை மீறினார்.
டி.பிரகாசமும்கே.நாகேஸ்வரராவும் மெரீனாகடற்கரையில் உப்புச் சத்தியாகிரகம் செய் தனர்.

2-வது வட்டமேசை மாநாட்டில் காந்தி கலந்துகொண்டார்இது லண்டனில் 1931 செப்டம்பர் 7-ல்தொடங்கியது
இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரித் தீர்வுகுறித்து உடன்பாடு ஏற்படாததால் பிரிட்டிஷ் பிரதமர்மக்டொ னால்டு தனது வகுப்புத் தீர்வை 1932 ஆகஸ்ட்17-ம் நாள் அறிவித்தார்.
1937-ம் ஆண்டு தேர்தலில்மொத்தமுள்ள 11மாநிலங்களில் காங்கிரஸ் 7 மாநிலங்களில் ஆட்சியைநிறுவியதுசிந்துவில் மட்டுமே முஸ்லீம் லீக் ஆட்சிஅமைத்ததுஅசாமில் முஸ்லீம் கூட்டணி அரசுநிறுவப்பட்டது.
1940 லாகூர் முஸ்லீம் லீக் மாநாட்டில் முதன்முறையாக ஜின்னா தமது இருநாட்டுக் கொள்கையைதெளிவுபடுத்தினார்.
பாகிஸ்தான் என்ற சொல்லை உருவாக்கியவர் ரகமத்அலிமுகமது இக்பால் 1930-ம் ஆண்டில் நடைபெற்றமுஸ்லீம்லீக்கின் முதல் மாநாட்டிலேயே இருநாட்டுக்கோட்பாட்டை ஏற்படுத்தினார்.
1942 ஜூலை 14-ம் நாள் வார்தாவில் காங்கிரஸ்செயற்குழு கூடி வெள்ளையனே வெளியேறுதீர்மானத்தை நிறைவேற்றியது.
வேவல் பிரவு 1945 ஜூன் 25-ம் தேதி சிம்லாவில்கூட்டினார்









விருதுகள்

பாரத ரத்னா விருது

பாரத ரத்னா இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளில் மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.தற்போது பாரத ரத்னா பதக்கத்தில் அரச மர இலையில் சூரியனின் உருவமும் "பாரத ரத்னா" என்ற சொல் தேவநாகரி எழுத்துக்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது.1954 ஆண்டு சட்டப்படி இவ்விருதை அமரர்களுக்கு வழங்க இயலாது. 1955ஆம் ஆண்டு சட்டப்படி அமரர்களுக்கும் இவ்விருதை வழங்க வழிவகை செய்யப்பட்டது

விருது பெற்றோர் பட்டியல்
1. முனைவர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1888-1975) 1954 - இரண்டாவது குடியரசுத்தலைவர், முதல் துணை குடியரசுத் தலைவர், தத்துவ ஞானி - தமிழ்நாடு

2. சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி (1878-1972) 1954 - கடைசி கவர்னர் ஜெனரல், சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் தமிழக முதல்வர் - தமிழ்நாடு

3. முனைவர். சி. வி. ராமன் (1888-1970) 1954 - நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி - தமிழ்நாடு

4. முனைவர். பக்வான் தாஸ் (1869-1958) 1955 - இலக்கியவாதி, சுதந்திர போராட்ட வீரர் - உத்தர பிரதேசம்

5. முனைவர். மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா (1861-1962) 1955 - கட்டிட பொறியாளர், அணை நிர்மானித்தவர், மைசூர் ராஜ்யத்தின் திவான் - கர்நாடகா

6. ஜவகர்லால் நேரு (1889 -1964) 1955 - முதல் பிரதம மந்திரி, சுதந்திர போராட்ட வீரர், எழுத்தாளர் - உத்தர பிரதேசம்

7. கோவிந்த வல்லப பந்த் (1887-1961) 1957 - சுதந்திர போராட்ட வீரர், உள்துறை அமைச்சர் - உத்தர பிரதேசம் (தற்போது உத்தராகாண்ட்)

8. முனைவர். தொண்டோ கேசவே கார்வே (1858-1962) 1958 - கல்வியாளர், சமூக சேவகர், பிறந்த நூறாவது ஆண்டில் விருது வழங்கப்பட்டது - மகாராஷ்டிரா

9. முனைவர். பிதன் சந்திர ராய் (1882-1962) 1961 - மருத்துவர், அரசியல்வாதி - முன்னாள் மேற்கு வங்க முதல்வர் - மேற்கு வங்கம்

10. புருஷோத்தம் தாஸ் டண்டன் (1882-1962) 1961 - சுதந்திர போராட்ட வீரர், கல்வியாளர் - உத்தர பிரதேசம்

11. முனைவர். ராஜேந்திர பிரசாத் (1884-1963) 1962 - முதல் குடியரசுத் தலைவர், சுதந்திர போராட்ட வீரர் - பீகார்

12. முனைவர். ஜாகீர் ஹுசைன் (1897-1969) 1963 - முன்னாள் குடியரசுத் தலைவர் - ஆந்திர பிரதேசம்

13. முனைவர். பாண்டுரங்க வாமன் கானே (1880-1972) 1963 - சமஸ்கிருத அறிஞர் - மஹாராஷ்டிரா

14. லால் பகதூர் சாஸ்திரி (மறைவுக்கு பின்) (1904-1966) 1966 - இரண்டாவது பிரதமர், சுதந்திர போராட்ட வீரர் - உத்தர பிரதேசம்
15. இந்திரா காந்தி (1917-1984) 1971 - முன்னாள் பிரதமர் - உத்தர பிரதேசம்

16. வி.வி. கிரி (1894-1980) 1975 - முன்னாள் குடியரசுத் தலைவர், தொழிற்சங்க தலைவர் - ஒரிசா

17. கே. காமராஜ் (மறைவுக்கு பின்) (1903-1975) 1976 - சுதந்திர போராட்ட வீரர் - முன்னாள் தமிழக முதல்வர் - தமிழ்நாடு

18. ஆக்னஸ் தெரேசா போஜாக்ஸ்யூ (அன்னை தெரேசா) (1910-1997) 1980 - 1979ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் - சமுக சேவையாளர் - மேற்கு வங்கம்

19. ஆச்சார்ய வினோபா பாவே (மறைவுக்கு பின்) (1895-1982) 1983 - சமூக சீர்திருத்தவாதி, சுதந்திர போராட்ட வீரர் - மகாராஷ்டிரா

20. கான் அப்துல் கபார் கான் (எல்லை காந்தி) (1890-1988) 1987 - முதல்முறையாக இந்திய குடியுரிமை இல்லாதவருக்கு விருது - சுதந்திர போராட்ட வீரர்- பாகிஸ்தான்

21. எம். ஜி. இராமச்சந்திரன் (மறைவுக்கு பின்) (1917-1987) 1988 - முன்னாள் தமிழக முதல்வர், நடிகர் - தமிழ்நாடு

22. முனைவர் பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் (மறைவுக்கு பின்) (1891-1956) 1990 - இந்திய அரசியல் சட்ட சிற்பி, சமூக சீர்திருத்தவாதி, பொருளாதார நிபுணர் - மகாராஷ்டிரா

23. நெல்சன் மண்டேலா (b 1918) 1990 - இரண்டாம் முறையாக இந்திய குடியுரிமை இல்லாதவருக்கு விருது - இனவெறி எதிர்ப்பு இயக்க தலைவர் - தென் ஆப்பிரிக்கா

24. ராஜிவ் காந்தி (மறைவுக்கு பின்) (1944-1991) 1991 - முன்னாள் பிரதமர் - புதுதில்லி

25. சர்தார் வல்லபாய் படேல் (மறைவுக்கு பின்) (1875-1950) 1991 - சுதந்திர போராட்ட வீரர், முதல் இந்திய உள்துறை அமைச்சர் - குஜராத்

26. மொரார்ஜி தேசாய் (1896-1995) 1991 - முன்னாள் பிரதமர், சுதந்திர போராட்ட வீரர் - குஜராத்

27. மௌலானா அபுல் கலாம் ஆசாத் (மறைவுக்கு பின்) (1888-1958) 1992 - சுதந்திர போராட்ட வீரர், முதல் இந்திய கல்வி அமைச்சர் - மேற்கு வங்கம்

28. ஜே. ஆர். டி. டாடா (1904-1993) 1992 - தொழில் அதிபர் - மகாராஷ்டிரா

29. சத்யஜித் ராய்  1992 - திரைப்பட இயக்குனர் - மேற்கு வங்கம்

30. ஏ. பி. ஜே. அப்துல் கலாம்  1997 - முன்னாள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி - தமிழ்நாடு

31. குல்சாரிலால் நந்தா (1898-1998) 1997 - சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் பிரதமர் - பஞ்சாப்

32. அருணா ஆசஃப் அலி (மறைவுக்கு பின்) (1908-1996) 1997 - சுதந்திர போராட்ட வீரர் - மேற்கு வங்கம்

33. எம். எஸ். சுப்புலட்சுமி (1916-2004) 1998 - கர்நாடக சங்கீத பாடகி - தமிழ்நாடு

34. சி. சுப்ரமணியம் (1910-2000) 1998 - சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் இந்திய விவசாய அமைச்சர், பசுமைப் புரட்சியின் தந்தை - தமிழ்நாடு

35. ஜெயபிரகாஷ் நாராயண் (மறைவுக்கு பின்) (1902-1979) 1998 - சுதந்திர போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி - பீகார்

36. ரவி சங்கர்  1999 - சிதார் கலைஞர் - உத்தர பிரதேசம்

37. அமர்த்தியா சென்  1999 - பொருளாதார நோபல் பரிசு வென்றவர் - மேற்கு வங்கம்

38. கோபிநாத் பர்தோலி 1999 - சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் அசாம் முதல்வர் - அசாம்

39. பிஸ்மில்லா கான் (1916 - 2006) 2001 - செனாய் இசை கலைஞர் - பீகார்

40. லதா மங்கேஷ்கர்  2001 - பாடகி - மகாராஷ்டிரா

41. பீம்சென் ஜோஷி  2008 - ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு கலைஞர் - கர்நாடகா 

இரு இந்தியர்கள் அல்லாதவர்களான கான் அப்துல் கபார் கானுக்கும் (1987) மற்றும் நெல்சன் மண்டேலாவுக்கும் (1990) இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 1992ல் சுபாஷ் சந்திர போசின் மறைவுக்கு பின் அவருக்கு வழங்கப்பட்ட இவ்விருது சட்டச் சிக்கல்கள் காரணமாக திரும்பப் பெறப்பட்டது.